நிறுவனத்தின் நிதிகளை உரிமையாளர்கள் சிறந்த முறையில் கையாள வேண்டும்

0

பிரதம மந்திரி டான் ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று முன்தினம் அறிவித்த வங்கி கடன் ஒத்திவைப்பின் மூலம் உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனத்தின் நிதிகளை சிறந்த முறையில் நிர்வகிப்பதோடு ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படுவதை குறைக்க வேண்டும் என்று பூமிபுத்ரா உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டது.
பூமிபுத்ரா உற்பத்தியாளர்கள் சங்கம் கூறுகையில், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இதுவே சிறந்த தருணம் என்றும், அவர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் நேற்று ஓர் அறிக்கையில் கூறியது.
அதன் தலைவர் டத்தோ அஸ்மான் யூசோப் கூறுகையில், பாதிக்கப்பட்ட வணிகத் துறைக்கு வழங்கப்பட்ட இடைக்கால காலத்தை நீட்டிப்பது நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை நிர்வகிக்க உதவும் என்றார்.
இந்த செயல், அவர்களின் வணிகம் கடினமான சூழ்நிலையிலிருந்து விடுப்பட உதவும் என்றார்.
“உற்பத்தியாளர்கள் தங்களின் வணிகத்தை புதுப்பிக்க, ஒரு வருடத்திற்கும் குறையாத காலம் தேவைப்படும். ஆக, இச்சலுகையை உற்பத்தியாலர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி நன்மை பெற வேண்டும்”என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார். இதுபோன்ற நெகிழ்வுத் தன்மைகள் உற்பத்தித் துறையில், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் சாதகமான வளர்ச்சியைத் தூண்டுகிறது என்றும் அவர் கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோயால் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடக்க மூலதனம் இல்லாததால் மீண்டும் தொடங்க முடியாத கட்டுமானத் திட்டங்கள் இன்னும் உள்ளன.
“அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தூண்டுதல் தொகுப்பு மிகவும் உதவியாக இருக்கும். கட்டுமான நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான உற்பத்தி தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக இந்த தூண்டுதல் தொகுப்பில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 6 =