நியாயமான விசாரணை கிடைக்காது

தற்சமயம் செயல்பாட்டில் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட
மொத்தம் 12 பேருக்கும் நியாயமானவிசாரணை கிடைக்காது என வழக் கறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இதற்குக் காரணம் இவர் களது வழக்கு விசாரணை குற்ற வியல் சட்டக் கோட்பாடு மற்றும் சாட்சிகளின் சட்டத்தின் அடிப் படையில் இருக்காது. மாறாக சொஸ்மா என்று அழைக்கப்படும் பாதுகாப்பு குற்றங்களின் சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என அவர்கள் கருத்து ரைத்துள்ளனர். தீவிரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு விசாரணை சொஸ்மா சட்டத்தின் அடிப்படையில்தான் நடைபெறும். வழக்கமான குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் அல்ல. சொஸ்மா சட்டத்தின் கீழ் நடத்தப்படும் விசாரணை ஒரு தலைப்பட்ச மாக அரசு வழக்கறிஞர் சார்பாகவே அமைந்திருக்கும். வழக்கமான குற்றவியல் வழக்குகளில் நியாயமான விசாரணைக்குரிய கூறுகளை சொஸ்மா சட்டம் அகற்றி யுள்ளது என்று வழக்கறிஞர் நியூ சின் யூ கூறினார்.

ஆவணங்கள் வழங்கப்படாது

உதாரணத்திற்கு, வழக்கமான குற்றவியல் விசாரணையில் பயன்
படுத்தப்படும் அனைத்து ஆவணங் களின் பிரதியும் குற்றம்சாட்டப்பட்ட வருக்கு வழங்கப்படும்.ஆனால், சொஸ்மா சட்டத்தின் கீழ் வழக்கில் முக்கிய ஆவணங்களாகக் கருதப் படுபவைகளில் பாதுகாப்புத் தகவல்கள் இருப்பதாக அரசாங்கம் கருதினால் அந்த ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டியதில்லை.

அடிப்படையற்ற சாட்சியங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்

இறந்து போனவர்களின் வாக்கு
மூலம் தேடக் கிடைக்காதவர் களின் வாக்குமூலம் கூட
விசாரணையில் ஏற்றுக் கொள்ளப்படும். சத்தியப்பிரமாணம் செய்யாத குழந்தைகளின் வாக்குமூலம் கூட வழக்கு விசாரணையில் ஏற்றுக் கொள்ளப்படும். விசாரணையின் போது பாதுகாப்பு என்ற காரணத்தில் அடையாளம் வெளியிடப்படாத சாட்சிகளின் வாக்குமூலமும் ஏற்றுக் கொள்ளப்
படும். மேற்குறிப்பிட்ட அனைவரிட மும் குறுக்கு விசாரணை செய்ய இயலாது. அடையாளம் வெளியிடப் படாத அந்த சாட்சி யார் என்பது தொடர்பான கேள்வியையும் குற்றம் சாட்டப்பட்டவர் களின் தரப்பு முன்வைக்க முடியாது. இதனால், குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை தற்காத்துக் கொள்ள முறையாக எந்த வாதத்தையும் முன்வைக்க இயலாது என அவர் விளக்கினார். நவம்பர் 2018ஆம் ஆண்டில் மொத்தம் இரண்டாயித்திற்கும் அதிகமானவர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந் தனர். நவம்பர் 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் மொத்தம் 159 சிறுவர்கள் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாக கூறப்பட்டது. தற்சமயம் நடந்துள்ள சொஸ்மா கைது நடவடிக்கைக்கு எதிராக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் சொஸ்மா சட்டத்தின் கீழ் நடப்பில் உள்ள 28 நாட்கள் விசாரணையின்றி தடுப்புக் காவல் காலவரையை 14ஆக குறைக்க சட்டமாற்றம் செய்யப்படும் என்று குறிப்பிட்டி ருந்தார். இந்தச் சட்டத்திருத்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த 28 நாள் காலவரையை குறைப்பது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணையை வழங்கி விடாது என வழக்கறிஞர் சிவானந்தன் குறிப்பிட்டுள்ளார். கடுமையான குற்றம் சாட்டப்பட் டவர்களுக்கு எதிராக அதிகபட்ச நம்பிக்கைக்குரிய அடிப்படை ஆதாரங்களுடைய சாட்சியங்கள் மட்டுமே முன்வைக்கப்பட வேண் டும். ஏதோ கேள்வியின் அடிப்படை யில் முன்வைக்கப்படும் சாட்சியங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். ஆனால், சொஸ்மா சட்டத்தின் கீழ் இவை அனைத்தும் தலைகீழாக உள்ளது.

செவிவழி வாக்குமூலங்களும்ஏற்றுக் கொள்ளப்படும்

ஒருவர் கூறியதாக மற்றொரு வர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்
தால் அதை எவ்வகையில் குறுக்கு விசாரணை செய்ய முடியும். முதல் கருத்தை வெளியிட்டவருக்கும், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் இடையில் உள்ள பின்னணியை எவ்வாறு நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும்.ஆகவே, சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் குற்றச்சாட்டு ஏறக்குறைய நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

வழக்கில் வென்றாலும் தடுப்புக் காவல் நீடிக்கும்

ஒருவேளை ஒருவர் இந்ததடங்கல்களையும் கடந்து தான்
குற்றமற்றவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டாலும் அரசு தரப்பு மேல்முறையீடு செய்யவிரும்புவதாக அறிவித்தால் அவர்களது தடுப்புக் காவல் வழக்கில் வெற்றி பெற்ற பிறகும் தொடரும். மேல்முறையீடு நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் ஆகியவற்றை கடந்து செல்லும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி அல்ல என்று அறிவிக் கப்பட்ட பிறகும் அவர்களது தடுப்புக்காவல் நீடிக்கும். ஒரு நிரபராதி நீதிமன்றத்தில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட பிறகும் ஏன் ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் சிறையில் வாட வேண்டும் என சிவானந்தன் கேள்வி எழுப்பினார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் நீண்ட கால தடுப்பு நடவடிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நெருக்குதல் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படலாம் என வழக்கறிஞர் அமீர் ஹம்சா அர்ஸத் கூறினார். இங்கிலாந்தில் 1970 -களில் இது போன்ற பாதுகாப்புச் சட்டம் முறையின்றி பயன்படுத்தப்பட்டு ’கில்பர்ட் போர் மற்றும் ’மெக்யூர் செவன்’ என்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வாறு அநீதி இழைக்கப்பட்டது என்பது
உலகறிந்த விஷயம். அவர்கள் மீதான குற்றச்சாட்டு முறையே
1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டு களில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(1970இல் கைது செய்யப்பட்டு ’கில்பர்ட் போர் 1989ஆம் ஆண்டும்
’மெக்யூர் செவன்’ 1991 ஆண்டும் நிரபராதி என்று அறிவிக்கப்பட்
டனர் ஆனால், அவர்களது வாழ்க்கை அந்த இடைப்பட்ட
இடைப்பட்ட காலத்தில் காவலி லேயே அஸ்தமனமாகிவிட்டது)
சொஸ்மா சட்டத்தில் சாட்சி களின் இரகசியங்கள் பாதுகாக்கப்
படுவதனால் அரசு தரப்பு உண்மை யற்ற சாட்சியை குற்றம் சாட்டப்பவ ருக்கு எதிராக களம் இறக்குவதற் கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, சொஸ்மா சட்டம் அரசியல் சாசனம் 149-ன் கீழ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளை தடுக்க தனி மனித உரிமையை மீறி சட்டம் இயற்றலாம் என்று அரசியல் சாசனம் 149 குறிப்பிடுகிறது. ஆனால், ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிறகு தேசிய பாதுகாப்பிற்கான ஆபத்து முடிவிற்கு வருகிறது அல்லது தடுக்கப்பட்டுவிட்டது. அரசு தரப்பு அவரது குற்றத்தை நிரூபிப்பது மட்டுமே எஞ்சியிருக் கும். சொஸ்மா வழக்கின் கீழ் நடத்தப்படும் வழக்கு முறைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் சம்பந்தம் இல்லை. இந்த சூழ்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை சட்ட ரீதியில் தற்காப்பதற்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நியூ கூறினார். ஒட்டுமொத்தமாக சொஸ்மா சட்டம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றச் சாட்டை சுமத்தி ஒருவரை குற்றவாளியக்குவதற்கு இலகு வாக பயன்படுத்தப்படுகிறது தவிர, தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்தை அகற்றுவதற்கு அல்ல என அவர் வாதிட்டார். ஆகவே, சொஸ்மாவில் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு முறை அரசியல் சாசனத்தின் 149 ஷரத்தை மீறுவதாக உள்ளது. இது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என வழக்கறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =