நிதி முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று நான் கூறவில்லை

நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட ‘மூசா’ அடா கோவிட்-19 நிதி முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல என சமய விவகாரங்களுக்கான அமைச்சர் ஸுல்கிப்ளி முகமட் அல் பக்ரி கூறினார்.
இஸ்லாமிய விவகார இலாகா (ஜாக்கிம்) வழங்கும் இந்த நிதி முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று தாம் கூறவில்லை என கூட்டரசுப் பிரதேச முன்னாள் முப்தியுமான அவர் நேற்று டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.
“உதவி தேவைப்படும் யாருக்கும் இந்த நிதி வழங்கப்படும் என பலமுறை நான் கூறியுள்ளேன்” என அவர் சொன்னார்.
கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ இந்த நிதி வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பணியில் ஈடுபட்டிருக்கும் அரசாங்க ஊழியர்கள் பாதிக்கப்பட்டாலும் இந்த நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 14 =