நார்வேயில் கொடூரம்: வில் அம்புகளால் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்- பலர் உயிரிழப்பு

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளான். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த அந்த நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளான். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.

இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், போலீசார் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தாக்குதல் நடத்தியது தனிநபர்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =