நாய்களை பட்டினி போட்ட குமாஸ்தாவுக்கு வெ.30,000 அபராதம்

இரு நாய்களை சரியாகப் பராமரிக்காமல் பட்டினி போட்ட குற்றத்திற்காக வணிகர் ஒருவருக்கு நேற்று ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றம் 30,000 வெள்ளி அபராதம் விதித்தது.
தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஓ ஜூ லியான் (வயது 40) என்பவர் ஒப்புக் கொண்டார்.
ஒரு பெண்மணியான இவர், 30,000 வெள்ளி அபராதத்தை செலுத்தத் தவறினால் 10 மாத சிறைத் தண்டனை அனுபவிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பினாங்கு தஞ்சோங் பூங்கா பாப்பார் எட்டேட்டில் உள்ள தமது வீட்டில் இரு நாய்களை சரியாகக் கவனிக்காமல் பட்டினி போட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இவர் இரு நாய்களையும் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தார். இதில் ஒரு நாய் வலி தாங்க முடியாமல் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 5 =