நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்

மலாயா பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக நடத்தப்படும் திருக்குறள் இசை நாடக விழாவிற்கு கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகைபுரிய இருந்தார். இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் இந்த விழாவிற்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தாலும் பத்திரிகையின் வாயிலாக தம்முடைய வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்திருக்கிறார். அதோடு மட்டுமின்றி அவரின் பிரதிநிதியாக சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆர்.சந்தாராகுமாரை அனுப்பிவைத்திருக்கிறார் என்று ஓம்ஸ் அறவாரியத்தின் தேசியத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஒம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.


இதற்கு முன்னதாக இதே மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழக தமிழ்த்தாய் அறக்கட்டளையும் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் ஓம்ஸ் அறவாரியமும் இணைந்து முதன் முறையாக திருக்குறள் மாநாடு நடத்திய போது அதன் தொடக்க விழாவுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு மிகச்சிறப்பான உரையை வழங்கினார். அது அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு மாநாடாக அமைந்தது.

அந்த வகையில் இந்த திருக்குறள் இசை நாட்டிய விழாவிற்கு தமிழகத்தில் இருந்து அதிகமானவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய ஓம்ஸ் தியாகராஜன், இங்கே உறவுப்பாலம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்ப டுகிறது. நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகம், மலேசியா ஆகிய 2 நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =