நான் மன நோயாளியல்ல!

0

செனட்டர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி சந்தை விலைக்கும் குறைவான விலையில் இரு நிலங்களை வாங்கிய விவகாரத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நான் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் கொடுக்கிறேன் என்றால் நான் ஆதாரங்களை வைத்துள்ளேன் என்று தானே அர்த்தம். வேள்பாரி சொல்வது போல் எந்தவித ஆதாரமுமின்றி புகார் கொடுக்க நான் ஒன்றும் மன நோயாளியல்ல என சுங்கை சிப்புட் ம.இ.கா முன்னாள் தொகுதித் தலைவர், எம்.லோகநாதன் கூறியுள்ளார்.
என்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், நான் கொடுத்த புகாரை மறுத்து, வேள்பாரி அறிக்கை விட்டுள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டு தமக்கு சிரிப்பாக இருப்பதாக வேள்பாரி கூறுவது பெரும் வேடிக்கையாக இருக்கிறது. இந்த புகார் குறித்து வேள்பாரி கொடுத்த பதில் மேலும் மக்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும்
தொடர்ந்து, கூட்டுறவு நிலத்தை தம்முடைய நிறுவனத்தின் பெயரில் மாற்றவில்லை என்று வேள்பாரி கூறுகிறார். ஆனால், அவர் நிறுவனத்தின் பெயரில் மாறப்பட்டதற்கு எஸ்.எஸ்.எம், நில தேடல் ஆவணங்கள் என அனைத்துமே என்னிடம் உள்ளது. உண்மையிலேயே வேள்பாரி இந்த குற்றச்சாட்டை மறுத்தால், ஏன் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?
மக்களின் சொத்து மக்களிடமே இருக்க வேண்டும். அதை வெறும் வாய் வார்த்தையாக வேள்பாரி மறுப்பதும், சிரிப்பதும் கேலி கூத்தாக உள்ளது. நான் தெளிவான மன நிலை, சிந்தனையோடு தான் என்னுடைய புகாரை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கியுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 4 =