நான் பதவி விலகியது ஏன்?

0

தம்மை நியமித்த பிரதமர் துன் மகாதீர் பதவி விலகியதை அடுத்து தாம் பதவி விலகுவதே நேர்மையான செயலாகும் என்றும் புதிய பிரதமர் தமக்குப் பொருத்தமானவரை அப்பதவிக்கு நியமித்துக் கொள்ள அது வகை செய்யும் என்றும் டான்ஸ்ரீ டோமி தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.தாம் பதவி விலகிய செயலானது இங்கிலாந்திலும் மற்ற ஜனநாயக நாடுகளிலும் கடைப்பிடித்து வரும் நடைமுறையே என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டத்துறைத் தலைவர் பதவிக்கு முன்னாள் நீதிபதிகளும் சட்டத்துறையின் மூத்த அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்த வேளையில், வெளியில் இருந்து ஒருவரை அப்பதவியில் அமர்த்தி மகாதீர் வியப்பை ஏற்படுத்தினார். எனினும், அதனை எதிர்த்து அம்னோவும் பாஸ் கட்சியும் போர்க்கொடி தூக்கின.
டோமி தோமஸ், அப்பதவியின்போது நஜிப் ரசாக், ரோஸ்மா மன்சோர், அமாட் ஸாஹிட் ஹமிடி, தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆகியோர் மீது ஊழல் வழக்குகளைச் சுமத்தினார். தற்போது அவர்கள் அனைவரும் ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், பண மோசடி ஆகிய குற்றங்களுக்கான வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே, தம் மீது நம்பிக்கை வைத்து அப்பதவியில் தம்மை நியமித்த துன் மகாதீருக்கு தமது நன்றியைப் புலப்படுத்திக் கொண்ட டோமி, தமது பதவியின் இறுதி நாள் வரை நீதியை நிலைநாட்டப் போராடியதாகவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + nineteen =