நான் துரோகி அல்ல; என்னை வீழ்த்த நினைத்தவர்களே துரோகிகள்

0

பேரா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் உதயமாவதற்கு உறுதுணையாக இருந்ததால், தம்மை ஒரு துரோகி என்று அடையாளப்படுத்துவதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாநில மந்திரி பெசார் அமாட் பைஸால் அஸுமு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் மந்திரி பெசாரை வீழ்த்த முயற்சித்ததே உண்மையான துரோகமாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
என்னை மக்களுக்குத் துரோகம் செய்தவர் என்று கூறுகிறார்கள். நான் இந்த நிமிடம் வரை மக்களுக்காகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேலையே செய்யாமல் மாநில அரசாங்கத்தையும் மந்திரி பெசார் பொறுப்பில் இருந்த என்னையும் வீழ்த்துவதற்காக திட்டங்களை வகுத்துச் செயல்பட்டவர்களே உண்மையான துரோகிகள்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஒரு நிலையான அரசாங்கமாக இயங்கும். மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் என்றும் நேற்று ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் சந்திப்பின்போது பேரா மாநில மந்திரி பெசார் பைஸால் அஸுமுவை வீழ்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த முயற்சிக்கு தெபிங் திங்கி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல் அஸிஸ் பாரிதான் காரண கர்த்தாவாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 7 =