நாட்டை விட்டு வெளியேறப் போகும் பத்து இலட்சம் பேர்

நாட்டை விட்டு எதிர்வரும் மாதங்களில் சுமார் பத்து இலட்சம் இளைஞர்கள் வெளியேற உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க (Mayantha Dissanayake) தெரிவித்துள்ளார்.கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், 1983 கலவரத்தின் போது அல்லது யுத்தத்தின் போது கூட இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன (Vajira Abeywardena) தெரிவித்தார். விவசாயிகளுக்கான இரசாயன உரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு எந்த தீர்வையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை என வஜிர அபேவர்த்தன குற்றம் சாட்டினார்.நாட்டை வழி நடத்துவதற்கு அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனையோ முறையான வேலைத்திட்டமோ இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே அடுத்த வருட நடுப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படும் என்றும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =