
கோலாலம்பூர், ஆக. 17-
நாட்டை உலுக்கிய மிகப் பெரிய ஊழலான 1எம்டிபி வழக்கு வரும் திங்கள் அன்று தொடங்கிறது. இவ்வழக்கைத் தடுத்து நிறுத்த முன்னாள் பிரதமர் நஜிப் கடைசி வரை போராடியும் அதில் அவர் தோல்வி கண்டார்.
மொத்தம் 42 கிரிமினல் குற்றங்களை நஜிப் எதிர்நோக்குகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 1எம்டிபி நிறுவனத்தின் 450 கோடி அமெரிக்க டாலர் (18.81 பில்லியன் வெள்ளி) தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
அமெரிக்க நீதித்துறை உட்பட 6 நாடுகளில் இது தொடர்பான விசாரணையும் நடந்தது. குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரும் நஜிப் ஒரு நீண்ட வழக்கைச் சந்திக்கிறார்.