நாட்டு மக்களின் நலன் காக்க சிறப்புப் பூஜை

0

கோவிட் 19 தாக்கத்தால் பல் வேறு இன்னல்கள் உயிர் இழப்புகள், பொருளாதாரப் பாதிப்புகள்,செலவினங்கள் போன்ற துயரங்களை பொது மக்கள் எதிர் நோக்கினார்கள்.
அரசாங்கம் பல வகையில் மக்களுக்கு வேண்டிய சலுகைகளை பாதுகாப்புகளை தினசரி கண்காணித்து உதவி செய்துள்ளது. அதில் டாக்டர்கள், தாதியர்கள் காவல் துறையினர் போன்ற முன்னிலைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது.
இன்னும் இந்த தாக்கம் இருந்து வருகிறது. எனவே பொது மக்கள் விழிப்புடன், அரசாங்கம் விதித்துள்ள பொது கட்டுப்பாட்டை மதித்து பின் பற்றி நடக்க வேண்டும் இல்லை என்றால் பாதிப்பையும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
மக்கள் நலன் மற்றும் உறவினர்கள் நண்பர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வகையில் தொழிலதிபர் சமுதாய பற்றாளர் விஸ்வநாதன் கெடா தீக்காம் பத்துவில் உள்ள கங்கை முனீஸ்வர ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =