நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய ஜின் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

பேராக் பாகான் செராய் ஜின் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தேசிய தினத்தை முன்னிட்டு பள்ளியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
வண்ணம் தீட்டுதல், புதிர் போட்டி உட்பட 3 டி வடிவில் நாட்டின் அடையாளங்களை செய்வது உட்பட சுமார் ஆறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் நாட்டின் சுதந்திரம் குறித்த விளக்கங்களும், சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் தியாகங்கள் குறித்தும்,மாணவர்களுக்கு தெளிவாக விளக்கமளிக்கப்பட்டதாக பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தன் கூறினார். இது மாணவர்களின் அறிவு சிந்தனைக்கு ஓர் ஏணிப்படியாகும் எனவும் கூறினார்.
47 மாணவர்களைக் கொண்டு செயல்படும் ஒரு தோட்டத் தமிழ்ப்பள்ளியாக இருந்தாலும், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆதரவாளர்கள் போன்றோரின் ஒத்துழைப்பாலும், உதவியாலும் பள்ளி சிறப்பாக இயங்கி வருவதில் பெருமைக் கொள்வதாக அவர் மேலும் விவரித்தார்.
இந்நிகழ்வை பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முருகேசன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவியும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + three =