நாட்டில் மூங்கில் வணிகங்களை அதிகரிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது

மலேசிய மரத்தொழில் வாரியம் (எம்.டி.ஐ.பி) மூலம் பெருந்தோட்ட தொழில்கள், மூலப்பொருட்கள் அமைச்சகம் (கே.பி.பி.கே) இணைந்து நாட்டில் மூங்கில் வணிகங்களை அதிகரிக்க சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.
பெருந்தோட்ட தொழில்கள், மூலப்பொருட்கள் அமைச்சகத்தின் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருதீன் அமன் ரசாலி கூறுகையில், நாட்டில் மூங்கிலின் பயன்பாடும் தேவைகளும் அதிகரித்து வருவதால் மூங்கில் மரங்களை அதிகமாக பயிரிட அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றார்.
“மூங்கில் உற்பத்தி தொழில்துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு ஆலோசனை சேவைகளையும் பயிற்சிகளையும் வழங்க அமைச்சகம் தயாராக உள்ளது.
“இந்த முயற்சி 12ஆவது மலேசியா திட்டத்தில் மூங்கில் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. இந்த திட்டம் மூங்கில் தொழில் மேம்பாட்டு செயல் திட்டம் 2021-2025 உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகிறது.
“வனத் தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூங்கில் இனங்களை பட்டியலிடுவது உட்பட ஆர்வமுள்ள தரப்பினருக்கு கடன்களை வழங்குவது உட்பட பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்படும். மேலும், நிலம் இல்லாத உற்பத்தியாளர்களுக்கு தவணை முறை கட்டணத்தில் நிலங்கள் வாடகைக்கும் விடப்படுகின்றன” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். மூங்கில், கரும்பு, அன்னாசி போன்றவற்றை பயிரிட ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் அமைச்சு கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 13 =