நாட்டில் மதச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு

0

மதத்தைத் துறப்பது முஸ்லிம்களுக்கு பாவச் செயலாகும். எனினும், நாட்டில் சமய சுதத்திரம் அனைவருக்கும் உண்டு என அரசின் முன்னாள் மலாய் மேல்மட்ட அதிகாரிகளின் மன்றமான ஜி25 குறிப்பிட்டுள்ளது. எனினும், மதத்தைத் துறப்பவர்களின் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படுவது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மதச் சுதந்திரத்தை அரசியலமைப்பு விதி அனுமதிப்பதால், மதம் மாற ஒருவர் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவரை அனுமதிக்க வேண்டும். அது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மலேசிய குடிமக்களுக்கும் பொருந்தும். முகமது நபியின் காலத்தில் மதம் மாறுவது குற்றமாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, மதத் துரோகமாகக் கருதப்பட்டது.
தற்போது மதம் மாறுவோருக்கு மாநிலங்களில் வெவ்வேறு விதமான தண்டனைகள் வழங்கப்படுகினறன. சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி மற்றும் விழிப்புணர்வு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. கிளந்தானிலும் திரெங்கானுவிலும் மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டிருந்தாலும், அது அமலில் இல்லை.
அண்மையில் அமெரிக்காவின் பியூ எனும் ஆய்வு மையத்தின் அறிக்கையில், மலேசியாவில் மதக் கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதாகவும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட, தற்போது அவை உச்சக் கட்டத்தை அடைந்திருப் பதாகக் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here