நாட்டின் பொருளாதாரம் பற்றிய விளக்கத்தைப் பெற்றார் முஹிடின்

நாட்டின் 8ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் டான்ஸ்ரீ முஹிடினுக்கு நாட்டின் பொருளாதார நிலை, நாட்டைப் பாதிக்கும் கோவிட்-19 வரைஸ் நோய் தாக்கம் பற்றிய விளக்கம் தரப்பட்டது. புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அந்த விளக்கமளிப்பு காலை 9.15க்குத் தொடங்கி இரண்டு மணி நேரம் வரை தொடர்ந்தது. அந்த விளக்கமளிப்பு நிகழ்ச்சியில் அரசின் தலைமைச் செயலாளர் முகமட் ஸுக்கி அலி, கருவூலத்தின் தலைமைச் செயலாளர் அமாட் பட்ரி முகமட் ஸாஹிர், பொருளாதார விவகார தலைமைச் செயலாளர் சைபுல் லெபாய் ஹுசின், நிதியமைச்சின் பொருளாதாரத் தலைவர் டாக்டர் வி.சிவபாலசிங்கம் மற்றும் நிதியமைச்சின் தேசிய பட்ஜெட் இயக்குநர் ஜோஹான் மஹ்முட் மெரிக்கான் ஆகியோர் கலந்து கொண்டார். அதன் பின்னர், கோவிட்-19 வைரஸ் சம்பந்தமாக அரசின் செயலாளர் ஸுக்கி, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷம் அப்துல்லா, குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் ஷைமி டாவுட், வெளிவிவகாரத் துறையின் தலைமைச் செயலாளர் எம்.ஷாருல் இக்ராம் யாக்கோப் மற்றும் தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியின் தலைமை இயக்குநர் மொக்தார் முகமட் அப்துல் ரஹ்மான் ஆகியோர் விளக்கமளித்தனர். அதனையடுத்து முஹிடின் கூட்டரசுப் பிரதேச முப்தி சுல்கிப்லி முகமட் அல்-பக்ரியை சந்தித்தார். மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் பில்லா ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை முஹிடினை (வயது 72) நாட்டின் 8ஆவது பிரதமராக நியமித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =