நாட்டின் கையிருப்பில் கைவைக்காதீர்!

கோவிட்-19 தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொரு ளாதாரச் சுமையைச் சமாளிக்க நாட்டின் 426 பில்லியன் வெள்ளி கையிருப்பில், கை வைக்க வேண்டாம் என புத்ரா ஜெயாவிற்கு பொருளாதார நிபுணர்கள் பலர் ஆலோசனை கூறியுள்ளனர்.
மத்திய வங்கியின் கையிருப்பைப் பயன்
படுத்தினால் நாட்டின் நிலைத் தன்மை பாதிக்கப்படுவதோடு முதலீட்டாளர்கள் நம்பிக்கையையும் இழக்கக்கூடும் என முன்னாள் அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகரான முகமட் அப்துல் காலிட் கூறினார். நடப்பில் உள்ள கையிருப்பு குறைந்தால், அந்நிய நேரடி முதலீடுகள் பாதிப்படையலாம். காரணம் அந்நிய முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கும் நாட்டின் கையிருப்பில்தான் கவனம் செலுத்துவார்கள் என்றார் அவர்.
ஆகையால் தற்போது மக்களு க்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமையைச் சமாளிக்க ஊக்குவிப்புத் திட்டத் திற்கு அரசாங்கம் நிதியைத் திரட்ட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமையைச் சமாளிக்க தேசிய எண்
ணெய் நிறுவனமான பெட்ரோ னாஸின் நிதியை அரசாங்கம் பயன்படுத்தலாம் என பொருளாதார நிபுணரான யா கிம் லெங் கூறினார். காரணம் பெட்ரோனாஸின் கையிருப்பு கோடிக் கணக்கில் உள்ளது. இந்த அவசர நேரத்தில் அரசாங்கம் பெட்ரோனாஸின் கையிருப்பைப் பயன்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டார். தங்களின் பொருளாதாரச் சுமையைச் சமாளிக்க மக்கள் சேமநிதியில் இருந்து மாதம் 500 வெள்ளியை மீட்டுக் கொள்ளலாம் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்புச் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 3 =