நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது – டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஜம்மு காஷ்மீர் சீனப்பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சிக்கு மத்திய அரசு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஜய் சாவ்னே எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அவமரியாதை செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 
இதுபோன்ற செயல்பாடுகள் டுவிட்டருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நடுநிலைத் தன்மை மற்றும் நேர்மை மீது கேள்வி எழுப்புவதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 9 =