நாடு திரும்பிய கிஷோணாவுக்கு உற்சாக வரவேற்பு

0

சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனைபடைத்த பேட்மிண்டன் இளம் வீராங்கனை கிஷோணாவுக்கு நேற்று சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெகிரி மாநில அரசாங்கத்தின் சார்பில் இளைஞர் விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் தௌபிக் அப்துல் கனி நேரில் வந்து கிஷோணாவை வரவேற்றார்.
21 வயதான கிஷோணா நெகிரி மாநிலத்தைச் சேர்ந்தவர். மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த பேட்மிண்டன் இறுதிச் சுற்றில் தங்கம் வென்றார். இறுதிஆட்டத்தில் இவர் 20-22, 21-14, 21 -13 என்ற புள்ளிக்கணக்கில் உலக தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் ருஸ்லி ஹர்தவானை வீழ்த்தி தங்கம் வென்றார். மேலும் அரையிறுதிச் சுற்றில் உலக தரவரிசையில் உள்ள தாய்லாந்தின் நிச்சோனை வீழ்த்தினார். உலக தரவரிசையில் 104ஆவது இடத்தில் கிஷோணா இருந்தாலும் சீ போட்டியில் பல முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தியது பாராட்டுக்குரியது.
21 வயதான கிஷோணா ரிவர்ச் வீராங்கனையாக மலேசிய குழுவில் இடம்பிடித்தார். மலேசியாவின் முதல்தர வீராங்கனை சோனாலி சியா பங்கேற்க முடியாமல் போனதால், அவர் இடத்தை பூர்த்தி செய்த கிஷோணா உலக நட்சத்திர வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
இதனிடையே தங்களது மகளை வரவேற்க கிஷோணாவின் பெற்றோர் செல்வதுரை – வளர்மதி நேற்று விமான நிலையம் வந்திருந்தனர்.
சிரம்பான் மா ஹாவா சீனப்பள்ளியில் கிஷோணா படித்தார். இவரால் மாண்டரின் மொழியும் பேசமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + five =