நாடாளுமன்ற கூட்டத்திற்கு வர தவறிய எம்.பி.க்கள் – மகாதீர் சாடினார்

0

நாடஞமன்ற கூட்டத்திற்கு வர தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சாடியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள தவறுவதால் அவர்கள் தங்களது தவணை காலத்தில் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என டாக்டர் மகாதீர் கூறினார்.

தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளராக வருவதற்கு அவர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்களுக்கு சேவையாற்றுவதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் மகாதீர் கூறினார்.

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தின்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால் அக்கூட்டம் இரண்டு நிமிடம் தாமதமாக  தொடங்கியது.

தம்பின் நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்  ஹசான் பாஹ்ரோம் எழுப்பிய வாய்மொழி மீதான முதல் கேள்விக்கு பதில் அளிக்கும்படி  மக்களவை சபாநாயகர்  முகமட் அரிப்‌ முகமட் யூசோப் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் முகமட்  பக்தியார் வான் சேக்கை அழைத்தபோது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லையென தேசிய முன்னணி லிப்பிஸ் தொகுதி உறுப்பினர் அப்துல் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 26 உறுப்பினர்கள் இருக்க வேண்டியது அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − 4 =