நாடாளுமன்றத்தைக் கூட்ட காலக்கெடு விதிப்பது ஜனநாயகத்துக்குப் புறம்பானது


  நாடாளுமன்றத்தைத் கூட்ட 14 நாள்கள் கெடு விதித்துள்ளது ஜனநாயகத்துக்குப் புறம்பானது, நாடாளுமன்ற சுதந்திரத்திற்கு முரணானது என்றும் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார்.

  அதிகாரத்துக்கு உட்பட்டு நாடாளுமன்றம் செயல்பட விட்டுவிட வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
  நாடாளுமன்றம் கூடும்போது அவசியமான, அவசரமான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.
  மேலும், இதுகாறும் ஆட்சியாளர்களின் உரிமையைப் பாதுகாக்கவும் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்படவும் அம்னோ பாடுபட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  நேற்று முன்தினம் அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி, நாடாளுமன்றத்தைக் கூட்ட அரசுக்கு 14 நாள் கெடு விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்னோவின் உச்சமன்றம் அதனை முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
  கட்சியின் பேராளர் மாநாட்டில் அளிக்கப்பட்ட அதிகார அடிப்படையிலும் உச்சமன்றத்தின் வழிகாட்டுதலின் மூலமும் அம்னோ செயல்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
  அதில் அரசுடன் ஒத்துழைப்பது, சில கட்சிகளுடன் ஒத்துழையாமை, இன்னும் பல விவகாரங்களில் எடுத்த முடிவுகளும் அடங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  thirteen + 9 =