நாடாளுமன்றத்தைக் கலையுங்கள்: அம்னோ, பாஸ் தலைவர்கள் அறைகூவல்

இரண்டு தனித் தனி பேருந்து களில் இஸ்தானா நெகாரா வில் வந்திறங்கிய அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிருபர்களிடம் ‘நாடாளுமன்றத்தைக் கலையுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தனர்.

பிற்பகல் 2.30 மணிக்கு பாஸ் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மான் தலைமையில் முதல் பேருந்து அரண்மனையை வந்தடைந்தது. அதில் பாஸ் கட்சியின் பாச்சோக் நாடாளு மன்ற உறுப்பினர் நிக் முகமது அப்டோ நிக் அப்துல் அஸிஸ், கட்சியின் தலைமைச் செய லாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் உட்பட இதர ஏழு நாடாளுமன்ற உறுப்பினர் களும் வந்தனர்.

அவர்களுக்கு முன்பதாகவே அம்னோவின் செம்போரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ தெங்கு ரெசாலி ஹம்சா ஆகியோர் அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் நோக்கில் வந்திருந்தனர். சிம்பாங் ரெங்காம்மின் மஸ்லி மாலேக், கென்னிங்காவ் டத்தோ ஜெப்ரி கெட்டிங்கான், திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமது சம்சுரி, திரெங்கானு சபாநாயகர் யாஹ்யா அலி ஆகியோரும் அங்கு காணப் பட்டனர்.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏற்றி வந்த பேருந்து பிற்பகல் 3.25 மணிக்கு அரண்மனையை வந்தடைந்தது. அதில் அம்னோ தலைமைச் செய லாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா, உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் யாக் கோப், பாசிர் சாலாக் டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான், பொந்தியான் எம்.பி டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி ஆகியோர் வந்திருந்த னர்.

நேற்றைய தினத்தில் 90 நாடாளுமன்ற உறுப்பினர் களிடத்தில் மாமன்னர் அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் நோக்கில் நேர்முகச் சந்திப்பு நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + twelve =