நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபியுங்கள்

0

காலம் தாமதிக்கலாம். ஆனால், அது ஒரு குறிப்பிட்டக்காலம் வரைதான். நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கின்றதா என்பதை புதிதாக நியமனம் பெற்ற பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நிரூபிக்க வேண்டும். அதில் இருந்து அவர் தப்ப முடியாது என ஜசெக தேசிய அமைப்பின் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தினார்.நாடாளுமன்றம் கலைக்கப் படுவதைத் தவிர்க்க 6 மாதத்திற்குள் புதிய அரசாங்கம் ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான அவர் சொன்னார். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாவிட்டால், புதிய தேர்தல் உட்பட எந்தவொரு சூழ்நிலைக்கும் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.
நாடாளுமன்றத்தில் இருந்து புதிய அரசாங்கம் தப்பியோடி விட முடியாது. நாடாளுமன்றக் கூட்டத்தைத் தாமதப்படுத் தலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
ஆறு மாதத்திற்குள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் திங்கள்கிழமை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்க்கப் பட்டதைத் தொடர்ந்து, பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு பெர்சத்து தலைவர் தலைமையேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 13 =