நாடற்ற இந்தியர்கள் பிரச்சினைக்கு கிராமத் தலைவர்கள் களமிறங்கினர்

சிலாங்கூர் மாநில இந்தியர் கிராமத் தலைவர்கள் அம்பாங் வட்டாரத்தில் மக்களுக்கு பல வகைகளில் சேவையாற்றி வருகிறார்கள்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ‘மைசெல்’ எனப்படும் குடியுரிமை, பிறப்புப் பத்திரம் தொடர்பில் பொதுமக்களுக்கு முழு விளக்கம் அளிக்கப்பட்டது.
அம்பாங்கில் இந்தியர்கள் அதிகம் வாழும் அம்பாங் கம்போங் இண்டாவில் சிலாங்கூர் கிராமத் தலைவர்கள் சார்பில் மைசெல் குறித்து விளக்கமளிப்புக் கூட்டத்தை லெம்பா ஜெயா கிராமத் தலைவர் நடேசன் ஏற்பாடு செய்தார்.
சிலாங்கூர் மாநில மைசெல் பிரிவின் அதிகாரிகளான திருமதி சாந்தா, ரகு ஆகியோர் பிறப்புப் பத்திரம் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இன்னமும் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் இந்தியர்கள் விரைந்து விண்ணப்பம் செய்யும்படி கிராமத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இங்கு பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கு பிறப்புப் பத்திரம், குடியுரிமை எடுக்காமல் இருக்கும் இந்தியர்கள் நேரடியாக எங்களோடு தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
போதுமான ஆவணங்கள் இருந்தும் இன்னமும் குடியுரிமை பெறமுடியாமல் இருக்கும் இந்தியர்கள் பிரச்சினை படிப்படியாகத் தீர்க்கப்பட்டு வருவதாக திருமதி சாந்தா தெரிவித்தார்.
பரிவுமிக்க சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் நாடற்ற இந்தியர்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
அம்பாங் வட்டாரத்தில் உள்ள இந்தியர்கள் குடியுரிமை பிரச்சினையை எதிர்நோக்கி இருந்தால், தங்களை நாடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
கம்போங் அம்பாங் இண்டாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் டாக்டர் சுப்பிரமணி, மோகனராஜ், ரகுநாதன் ஆகியோருடன் சிலாங்கூர் மாநில இந்தியர் கிராமத் தலைவர் குழுவிற்குத் தலைமையேற்றிருக்கும் ராஜேந்திரன் ராசப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், குடியுரிமை தொடர்பில் விளக்கக் கூட்டங்களும் அதற்கான மனு பாரங்களும் சம்பந்தப்பட்டவர் களுக்கு வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − seventeen =