நாடகம், கலைப்படைப்பில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை குவித்த மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

ஜொகூர், ஆக. 10-
சிங்கப்பூரில் சிங்கை கலைப் படைப்பு விழா அங்குள்ள மரினா மாண்டரின் ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இக்கலை விழாவில் ஜொகூர் மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று அதில் தங்கள் நாடகம் மற்றும் கலைப் படைப்புகளை அற்புதமாக படைத்து 1 தங்கம் 4 வெள்ளிப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
5 பிரிவுகளில் நாடகங்களையும் கலைப் படைப்புகளையும் படைத்து அதில் வெற்றி பெற்றுள்ளனர்.
’சூப்பர் ஹீரோஸ் நாடகத்தில் நடித்த அக்ஹாஸ் த/பெ ஆறுமுகம், நலின் யுகேந்திரன் த/பெ சுரேஷ், தினேஷ் த/பெ நிலா குமாரன், நிவிலியன் த/பெ மோரிஸ் ஜோசோப், டிக்ஷன் த/பெ லாலன், ஹரண் த/பெ பிரபாகரன், பி.சரிஸ்திகுமார் த/பெ பாலசந்தர் ஆகியோர் தங்கம் வென்றனர்.
’சூப்பர் ஹீரோஸ் நாடகத்தில் 9 வயது முதல் 10 வயது மாணவர்கள் பங்கேற்று சிறப்பாக படைத்தனர்.
அடுத்ததாக ’மோனா அன்ட் தி லிட்டல் அவதார்ஸ் என்ற நாடக படைப்பில் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
கயல்விழி த/பெ குமார், சுபாத்திஷா த/பெ பரமசிவா, பிரிஷ்கா மேனன் த/பெ திவாகரன், ஸ்ரீ ராகவேந்திரா நாயுடு த/பெ வாசுதேவன், திரிலோச்சனா நாயர் லிவாசினி த/பெ பாலசுப்பிரமணியம், கேஷிக்கா த/பெ வியஜகுமார் மற்றும் தவனேஷ்குமார் த/பெ வியஜகுமார் அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.


’அலி அன்ட் ஆ சோங் நாடகத்தில் நடித்த தாரேஷ்ந்திரன் த/பெ சுடிர் நாயர், ஷேக்கினா நேஷா த/பெ பூவரசன், நித்தியேன் மோரிஸ் ஜோசோப், மனிஷா நாயர் த/பெ பாஸ்கரன் நாயர், ஜஸ்மித்தா த/பெ விஜயன், டினேஷ் த/பெ பிரேம்குமார் மற்றும் தருண் குமார் த/பெ ஜெயகுமார் ஆகியோர் அந்த நாடகம் வழி வெள்ளிப் பதக்கத்தை வென்று மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
’தி மெர்மெய்ட் நாடகத்தில் நடித்த தேவேஷ் த/பெ தேதாஸ்,டிவியா த/பெ ரவிந்திரன்,நிஷா சுரேஷ் த/பெ குமார்,ஹோம லெட்சுமி த/பெ கோடீஸ்வரன், காவியாஷினி த/பெ சிவலிங்கம், நிஷா பெரிகேஷ் மற்றும் நிமிஷா த/பெ சரவணன் ஆகியோர் அந்நாடகம் மூலம் மேலும் ஓர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
இவ்விழாவில் தனி நபர் இசைப் படைப்பு போட்டியும் நடத்தப்பட்டது. அதிலும் மாசாய் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவியான அருளினி பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு போட்டிகளிலும் , தனித்திறமை போட்டிகளிலும் புத்தாக்க அறிவியல் போட்டிகளிகளிலும் கலந்து கொண்டு தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று அவர்கள் சார்ந்த தமிழ்ப் பள்ளிகளுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள்.
அவ்வகையில் மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிங்கப்பூரில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றது அப்பள்ளியின் நாடகப் பிரிவுக்குத் தலைமையேற்று மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து அதில் வெற்றி பெற செய்து ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கத்தையே சேரும்.


தலைமையாசிரியர் பெரியாச்சி பெருமாள், புறப்பாடத் துணை தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முரளி ஆகியோர் ஒத்துழைப்பு நல்கினர்.
ஆசிரியர்கள், ஜெயலட்சுமி, புஷ்பவல்லி,செந்தாமரை,தனேஸ்வரி, ஆகியோர் மாணவர்களின் நாடக ஒப்பனைகள் மற்றும் ஆடையலங்காரப் பிரிவில் பொறுப்பேற்று சிறப்பாக மாணவரை தயார்ப்படுத்தினர்.
இவ்விழாவில் முதல் வரை கடைசி வரை பேருதவி நல்கிய நண்பர் ஒஸ்மானுக்கும் நாடக ஏற்பாட்டுக்குழு ஆசிரியர் கஸ்தூரி இராமலிங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 15 =