நம்பிக்கையோடு களம் இறங்குவேன் – கிஷேனா செல்வதுரை

மலேசிய பேட்மின்டன் உலகில் இப்போதைக்கு மகளிர் பிரிவில் நம்பிக்கைக்குரிய ஒற்றையர் ஆட்டக்காரராக கிஷேனா செல்வதுரை விளங்கிவருகிறார். தேசிய பேட்மின்டன் குழுவில் இடம்பெற்றிருந்த சோனியா சியா நீக்கப்பட்டதைத் தொடர்து இப்போது அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிஷோனாவுக்கு தமது ஆற்றலை அனைத்துலக ரீதியில் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. உலகில் இப்போதைக்கு 62 ஆம் நிலை விளையாட்டாளராக கிஷோனா கணிக்கப்பட்டிருந்தாலும் மேலும் முன்னேற்றத்தை காண்பதற்கு அடுத்து வரும் சில அனைத்துலக போட்டிகளில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் 23 வயதுடைய கிஷோனா உணர்ந்துள்ளார்.

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த கிஷோனா அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டிக்கு மும்மூரமாக தயாராகிவருகிறார். அதன்றபிறகு பிரான்ஸில் ஒர்லியன்ஸ் மாஸ்டர் பேட்மிண்டன் போட்டியிலும் அவர் கலந்து கொண்கிறார். மார்ச் 17ஆம் தேதி தொடங்கி 22 ஆம்தேதிவரை அகில இங்கிலாந்து போட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது. உலகில் முதல் 30 ஆட்டக்காரர்களின் ஒருவராக இடம்பெற வேண்டும் என்பதே தமது இலக்காகும் என்றும் அதற்காக கடுமையாக பாடுபடப் போவதாக கிஷோனா தெரிவித்தார். அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி உலகின் பிரசித்தி பெற்ற போட்டியாக திகழ்வதால் அப்போட்டியில் கலந்துகொள்ளவரும் அனைவருமே வெற்றி பெற வேண்டும் என இலக்கோடு வருவார்கள். எனவே இந்த போட்டி தமக்கு பெரும் சவாலாக விளங்கும் என்பதை கிஷோனா ஒப்புக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =