நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..!

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வெற்றி பெறலாம் என ஓர் அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளார். இருப்பினும் நீண்ட நாட்களுக்கு அது முஹிடினுக்கு பதுகாப்பாக இருக்காது என மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளரான அஸ்மி ஹஸான் கூறினார்.
தற்போதைய நிலைக்கு முஹிடின் பிரதமராக நீடிக்க முடியும். ஆனால் இது நீண்ட நாளைக்கு நிலைக்காது என்றார் அவர். அடுத்த பொதுத் தேர்தல் வரை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் நீடிக்காது என்ற பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிக்கையை தாம் ஒப்புக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். பெரிக்காத்தான் நேஷனல் சிறுபெரும்பான்மையைக் கொண்ட மற்றும் சிதறிய கூட்டணி என்பதால் அன்வாரின் மதிப்பீட்டில் உண்மை இருப்பதாக அவர் சொன்னார். இதனிடையே பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சிறு பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால், அந்தக் கூட்டணி ஆட்டம் கண்டுள்ளதாக மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளர் அவாங் அஸ்மான் பாவி தெரிவித்திருந்தார். ஆகையால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிக்க முஹிடின் தமது ஆதரவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 8 =