நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவர இது நேரமல்ல

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீது நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டுவரும் பாஸ் கட்சியின் திட்டத்தில் தவறு எதுவும் இல்லை என பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் ராய்ஸ் ஹுசேன் கூறினார்.
ஆனால் தற்போதைய நிலையில் இது பொருத்தமான ஒன்றல்ல என அவர் குறிப்பிட்டார்.கோவிட்-19 தாக்கத்தால் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்தான் நாம் தற்போது கவனம் செலுத்த வேண்டும். ஒருவருக்கு ஒருவர் இடையே தங்களின் அரசியல் பலத்தைக் காட்ட இது நேரம் அல்ல என்றார் அவர்.
முஹிடின் மீது நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து பாஸ் கட்சி பெர்சத்துவுடன் கலந்தாலோசி த்ததாக அவர் சொன்னார்.கோவிட்-19 தாக்கத்தினால் நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கான திட்டங்களையும் நடப்பு அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் தற்போதைய நிலையில் பிரதமர் மீதான நம்பிக்கைத் தீர்மானம் அவசியம் இல்லை என தாம் கருதுவதாக ராய்ஸ் தெரிவித்தார்.இருப்பினும் வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பாஸ் கட்சியின் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதில் முஹிடின் வெற்றியடைவார் என அவர் சொன்னார்.முஹிடினுக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அச்சப்பட வேண்டிய அவசியம் எதுவுமில்லை என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − six =