நம்பிக்கைக் கூட்டணி எனது உயிர் மூச்சு அதில் இருந்து விலக மாட்டேன்

0

பக்காத்தான் ஹராப்பான் எனும் நம்பிக்கைக் கூட்டணி யின் வெற்றிக்கு இறுதிவரை போராடுவேன். மற்றவரின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக் கும் அடிபணியேன். எக்காரணத்தைக் கொண்டும் அக்கட்சியில் இருந்து விலகி ஓடமாட்டேன். என்னை நம்பி வாக்களித்த மக்களின் நலனுக்காகப்பாடுபடுவேன்.
எதற்கும் பின் வாங்க மாட்டேன். கட்சி பணியே உயிர் மூச்சாக கொண்டு செயல்படு வேன் என கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மனந்திறந்து கூறினார்.
இங்கு சுங்கை கீடு தோட்ட தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் புதிய கட்டுமான இடத்திற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், எந்த சூழ் நிலை யிலும் பிறழாமல் நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த அனை வரும் கட்சி நலனுக்காக கைகோர்த்து செயல்படு கிறோமென கூறினார்.
கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க வந்தவர்கள் பதவி பேராசையால் இன்று தடுமாற்றத்தில் தடம் புரண் டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது. வரும் மே 18க்கு பிறகு இந்த சூழ்நிலை வேறு காரணங்களாகக்கூட மாறிப்போகலாம். அப்போது எங்களின் உறுதி மாறா கொள்கை வெற்றி பெறலாம்.
அன்று கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம், நம்பிக்கைக் கூட்டணி முன்னெ டுக்கும் அதே வேளையில், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இக்கட்சி தொடர்ந்து வலுவோடு செயல் படுமென நீர், நிலம், இயற்கை வளத்துறையின் முன்னாள் அமைச்சரும் கட்சியின் உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் நம்பிக்கை தெரிவித் தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − thirteen =