நமீபியா கடற்கரைகளில் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கும் சீல்கள்

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் உள்ள கடற்கரையில் ஆங்காங்கே சீல்கள் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கின்றன. 
வெல்விஸ் வளைகுடா நகரின் அருகே பெலிகன் பாயின்ட் கடற்கரைகளில் செப்டம்பர் மாதம் சில சீல்கள் இறந்து கிடந்தது முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அதிக அளவில் சீல்கள் இறந்துள்ளன. சுமார் 7000 சீல்கள் வரை இறந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீல்கள் கொத்துக் கொத்தாக இறப்பது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து ஓசியன் கன்சர்வேசன் அமைப்பினர் நடத்திய ஆய்வில் சீல்கள் விரும்பி உண்ணும் மீன்கள் குறிப்பட்ட பகுதியில் இடம்பெயர்வதால் இந்த அவல நிலை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த சீல்களின் சாம்பிள்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − one =