நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை

0

சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஐஸ்வரயா ராய், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, முன்னனி நடிகர்களான ஷாருக்கான், நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

காஜல் அகர்வால்

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி திறப்பு விழா காண உள்ளது. இச்சிலையை நடிகை காஜல் அகர்வாலே திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். மேடம் துசாட்ஸ் சிங்கப்பூரில் எனது மெழுகு  சிலை அமைப்பதில் பெருமை அடைகிறேன் என்று காஜல் அகர்வால் கூறி உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + two =