நடமாட்ட தடை உத்தரவை ஏப்ரல் 28 வரை நீட்டியுங்கள்!

0
University of Malaya Adjunct Professor Tan Sri Dr Kamal Salih

கடுமையான பாதிப்பை உண்டாக்கியிருக்கும் கோவிட்-19 தொற்றுக் கிருமியை முழுமையாக துடைத்தொழிக்கும் நடவடிக்கைகள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அந்த நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவை ஏப்ரல் 28ஆம் தேதி வரை தொடர வேண்டும் என்று மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகம் பரிந்துரைத்துள்ளது. இந்த ஆலோசனையை மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அகப்பக்கத்தில் நேற்று பதிவேற்றம் செய்திருந்தார்கள். அந்த பதிவேற்றத்தை செய்தது தாம் தான் என்று மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகத்தின் தலைவர் டாக்டர் கமால் சாலே உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது, அவர் அந்த தகவலை உறுதிப்படுத்தினார். கோவிட்-19 குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி நடமாட்டத் தடை உத்தரவு தொடங்கப்பட்ட 18ஆவது நாள் அதாவது வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி இந்த கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 435ஆக உயரும் என்று ஆய்வு கூறுகிறது.
இது வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் முடிவுக்கு வரக்கூடிய ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏப்ரல் 12ஆம் தேதி இந்த கோவிட்-19 தொற்றுக் கிருமியால் மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,070ஆக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்றால் நடமாட்டத் தடை உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு 14 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தாங்கள் பரிந்துரைத்திருப்பதாகவும் டாக்டர் கமால் சாலே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 5 =