நடமாட்டத் தடை லங்காவியின் சுற்றுலாத் துறையை நிர்மூலமாக்கியுள்ளது

நாட்டில் அமலில் இருக்கும் நடமாட்டத் தடுப்புச் சட்டத்தினால் சுற்றுலாத் தலமாக இயங்கும் லங்காவியைப் பெரிதும் பாதித்திருப் பதாக லங்காவி மேம்பாட்டுக் கழகத்தின் (லாடா) தலைமைச் செயல்முறை அதிகாரி ஹெஸ்ரி அட்னான் தெரிவித்தார்.
வெளிநாட்டினரின் வருகைக்குத் தடைவிதிக்கப் பட்டதை அடுத்து, சுற்றுலாத் துறையில் சம்பந்தப்பட்டிருக்கும் சுற்றுலாத் தலங்கள், கடற்கரையோர கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள், தங்குமிடங்கள், யஉணவகங்கள், தீர்வையற்ற பொருள்களை விற்கும் கடைகள், அங்காடிக் கடைகள், துணிக் கடைகள், போக்குவரத்துத் துறையைச் சார்ந்த பல தொழில் துறைகளும் வருமானம் இன்றி தவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், லங்காவியில் பதிவு பெற்ற 5,000 தொழில் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், லங்காவியில் நாளொன்றுக்கு 1,200 மெட்ரிக் டன் பொருள்கள் வந்திறங்கியதாகவும் தற்போது அது, 200 மெட்ரிட் டன்னாகக் குறைந்துள்ளது.
கடற்கரையில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களின் ஒரு நாளுக்கான வருமானம் 300 ரிங்கிட்டிலிருந்து 100 ரிங்கிட்டுக்கும் கீழ் குறைந்துள்ளது.
இங்குள்ள முதலைப் பண்ணையின் வருமானம் 30 விழுக்காடு குறைந்துள்ளது. விடுமுறையில் வேலையில் ஈடுபட்டு நாளொன்றுக்கு 50 ரிங்கிட் வரை ஈட்டும் மாணவர்களின் வருமானம் அறவே இல்லாது போனது.
நடமாட்டக் கட்டுப்பாடு மீட்டுக் கொண்டு, 6 மாதங்களுக்குப் பின்னரே லங்காவியின் நிலைமை சீர்படும். எனவே, இங்கிருக்கும் சுற்றுலாத் துறை தொடர்ந்து இயங்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹெஸ்ரி அட்னான் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + thirteen =