நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவர்!

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறுபவர்கள் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்படலாம். தேவைப் பட்டால் சிறையிலும் அடைக்கப் படலாம் என்று அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்தார்.
மக்களுக்கு தெளிவான அறிவிப்பைச் செய்து விட்டோம். இருந்தும் பிடிவாதம் காட்டினால் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
இதுவரை 107 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தங்களது குண்டர் கும்பல் தனத்தைக் காட்ட நினைப்பவர்களுக்கு போலீஸ் பாடம் புகட்டும். குறிப்பாக பொது இடங்களில் காரணமின்றி கூட்டமாகக் கூடி இருப்பவர்கள் உடனடியாகக் கைது செய்யப் படுவார்கள்.
அது மட்டுமின்றி அரசாங்கப் பணியாளர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறாக இருப்பவர்கள் தயவு தாட்சண்யமின்றி கைது செய்யப்படுவார்கள். அப்படி ஒரு நிலை வந்தால் 3இல் இருந்து 4 நாட்கள் சிறையில் அடைபட்டிருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 92 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அது மட்டுமின்றி குற்றச்செயல்கள் 70 விழுக்காடு குறைந்திருக் கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்டிஎம் தொலைக் காட்சியில் செலாமாட் பாகி மலேசியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி வழங்கிய போது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − nine =