நஜிப் விவகாரத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவில்லை

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து அம்னோ விலகிக்கொள்ள வேண்டும் என்ற தமது ஆலோசனையால் தாம் முரட்டுத் தனமாக நடந்து கொள்ள வில்லை என முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெளிவுபடுத்தினார்.
தாம் கூறியது உண்மை, கசப்பான உண்மை, அதை சில தரப்பினரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப் பினருமான அவர் சொன்னார்.
‘நஜிப்பிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் நோக்கம் எனக்கு இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அந்த முன்னாள் பிரதமருக்கு உரிமை உண்டு.’ என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் அம்னோ தெளிவாக இருக்க வேண்டும். மேலும் கட்சியின் நலன்களுக் காக அம்னோ முன்னேறிச் செல்ல வேண்டும் என அவர் குறிப் பிட்டார்.
நஜிப் விவகாரம் உண்மை என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால் சில தரப்பினருக்கு இது கசப்பாக தான் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நஜிப் விவகாரத்தைப் பற்றி கருத்துரைத்ததற்காக கட்சியி லிருந்து நீக்கப்பட்ட லோக்மான் நூர் அடாம் கடுமையாக சாடியது குறித்து கைரி கருத்துரைத்தார்.
‘நான் கட்சிக்கு விசுவாச மானவன். மனதில் பட்டதை சொல்லி விட்டேன். ஆனால் சிலர் உண்மையைப் பேச பயப்படு வார்கள்’ என அவர் சொன்னார்.
உயர்நீதிமன்றத்தால் நஜிப் குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து அம்னோ புதிய பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என கைரி கூறியிருந்தார்.
எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் வெள்ளி கையாடல் வழக்கில் நஜிப் குற்றவாளி என்ற தீர்ப்பை தொடர்ந்து நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =