நஜிப் மீதான மூன்றாவது வழக்கு: திங்கள்கிழமையன்று விசாரணை தொடங்கும்

0


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் 1 எம்டிபி எனப்படும் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியின் மீது இணைந்து சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமையன்று தொடங்கும் என்று உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

1 எம்டிபி மீதான தலைமை கணக்காய்வாளரின் இறுதி அறிக்கையை மாற்றியமைத்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அருள் கந்தா மீது இணைந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்கும்படி கடந்த வாரம் செய்துக் கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை உயர்நீதிமன்ற நீதிபதி முகம்மது ஸாய்னி மஸ்லான் நிராகரித்தார்.

இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தால் அதற்கு மாற்று தேதிகளை நிர்ணயிப்பது மிகவும் சிரமம் வாய்ந்ததாகி விடும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான 1 எம்டிபியின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹால்மி 1 எம்டிபி தொடர்பான மற்றொரு வழக்கில் சாட்சியமளித்து வருவதால் வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அரச தரப்பு கோரிக்கையை முன்வைத்தது.
எனினும் அரசு தரப்பு மற்ற சாட்சிகளை முதலில் விசாரிப்பது மூலம் விசாரணையை தொடங்கலாம் என்று ஸாய்னி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here