நஜிப் மீண்டும் பிரதமராகத் திட்டமிடுகிறார்!

அடுத்த வாரம் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் இருந்து விடுபட்டால், மீண்டும் பிரதமராக நஜிப் துன் ரசாக் திட்டம் கொண்டுள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.
நீதிமன்றத்தில் அந்த முன்னாள் பிரதமர் தோல்வி கண்டால் நிச்சயம் தமது நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழக்க நேரிடும் என்றார் அவர்.
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர்
வேட்பாளராக டான்ஸ்ரீ முஹிடின் யாசினை பெரிக்காத்தான் நேஷனல் முன்மொழியுமா என கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு மகாதீர் இவ்வாறு பேசினார்.
பெரிக்காத்தான் நேஷனல் மிகச்சிறிய பெரும்பான்மையைக் கொண்ட ஓர்
அரசாங்கமாக இருப்பதால் திடீர்த் தேர்தலை நடத்த பிரதமர் முஹிடின் திட்டம் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
இருப்பினும் பிரதமர் வேட்பாளராக அம்னோவைச் சேர்ந்த ஒருவரை முன்மொழிய அம்னோ யோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே நஜிப்பின் விருப்பம் என லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர்
சொன்னார்.
1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் 42 மில்லியன்நிதியைக் கையாடியதாக நஜிப்7 ஊழல்
குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த வழக்கு மீதான தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸா
ஜூலை 28ஆம் தேதி
காலை 10.00 மணிக்கு வழங்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =