முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை மீண்டும் தேசிய முன்னணி தலைவராக நியமனம் செய்ய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்னோ வட்டாரங்கள் கூறுகின்றன.
தேசிய முன்னணியின் முதுகெலும்பான அம்னோவின் தலைவர் தான் இந்த பதவிக்கு நியமனம் பெறுவது வழக்கமான ஒன்று. அண்மையில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை புத்ரா உலக வாணிப மையத்
தில் நடைபெற்ற அம்னோ பேராளர்
கள் மாநாட்டின் போது நஜிப்பிற்கு அணுக்கமானவர்கள் இந்த பிரசா ரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
அம்னோ மாநாட்டிற்கு வெளியே அம்னோ தொகுதித் தலைவர்கள் மகளிர்,இளைஞர் மற்றும் புத்ரி தலைவர்களுக்கு நண்பகல் உணவு அல்லது இரவு உணவின் போது இந்த பிரசாரம் நடத்தப்பட்டதாக அந்த தகவல் தெரிவித்தது.
இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு நஜிப்பின் உதவியாளர்கள் வெள்ளி 400 மற்றும் வெ. 5 ஆயிரம் வழங்கியதாக நம்பப்படுகிறது.
இருப்பினும் நஜிப்பிற்கு நெருக்க மான ஜமால் யூனோஸ், முன்னாள் தேசிய முன்னணி தலைவருக்கு ஆதரவை திரட்ட கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் தகவல்களை மறுத்தார். தங்களுடைய நிகழ்ச்சி களுக்கு நிதி திரட்ட அம்னோ அடி
மட்ட உறுப்பினர்கள் நஜிப்பின் உத
வியை நாடியதாக ஜமால் தெரிவித் தார். நஜிப் தேமு தலைவராக நியமனம் செய்யப்பட வேண்டும் என நடப்பு அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தார்.
இருப்பினும் இந்த பரிந்துரையை தேமு கூட்டணி நிராகரித்தது. இதற்கு பதிலாக தேமு ஆலோச
கராக நஜிப் நியமனம் செய்யப் பட்டார்.