நஜிப்பை கண்டு நான் அதிர்ச்சி அடைகின்றேன்

0

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தற்காப்பு வாதம் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் முன்னாள் பிரதமர் நஜிப் அதிர்ச்சியடைவதைக் கண்டு தாம் அதிர்ச்சியடைவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.நஜிப் குற்றவாளி என உலகத்துக்கே தெரியும். இந்த வழக்கு விசாரணை 3 மாதங்கள் நடைபெற்றது. விசாரணையில் நஜிப்புக்கு நல்ல விசாரணை கிடைத்தது” என்றார் அவர்.
நோய் வாய்ப்பட்டதாக விடுப்பு வழங்கப்பட்டும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய நஜிப்பால் செல்ல முடிந்தது என அவர் சொன்னார்.
நீதிமன்ற விசாரணைக்கு நஜிப்பால் வர முடியவில்லை. ஆனால் வீங்கிய கண்களுடன் தஞ்சோங் பியாய்க்கு அந்த முன்னாள் பிரதமரால் செல்ல முடிந்தது என மகாதீர் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =