நஜிப்பின் தொலைபேசி உரையாடல்: வெளியிட்டது தவறானது!

0

நஜிப் ரசாக்கின் தொலைபேசி உரையாடல் பதிவை ஊழல் தடுப்பு ஆணையம் பொதுமக்களுக்கு வெளியிட்டது மிகப் பெரிய தவறாகும் என வழக்கறிஞர்மன்றம் சாடியுள்ளது.
அதனை வெளிப்படையாக செய்தியாளர்களிடம் ஒலிபரப்பு செய்தது, அதனை ஊடகங்களே விசாரிக்க வழிவகுத்துள்ளதாக அதன் தலைவர் அப்துல் ஃபாரீட் அப்துல் கஃபூர் தெரிவித்தார்.
அதனை வெளிப்படுத்தியது பல சிக்கலுக்குக் காரணமாக அமையும். மேலும், ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது நம்பிக்கை குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அது 1972ஆம் ஆண்டு அதிகாரத்துவ தகவல் சட்டத்துக்கு முரணாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அது சம்பந்தமாக லத்தீபா கோயா விமர்சித்திருப்பது தேவையற்றது. நீதிமன்றத்தின் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அப்துல் ஃபாரீட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 1 =