நஜிப்பின் சமயம் சார்ந்த சத்தியம் ஷரியா விதிமுறையில் இல்லை

0

அண்மையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் செய்து கொண்ட சத்தியப் பிரமாணம் ஷரியா சட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

மனைவி சோரம் போனதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டும் கணவனின் குற்றச்சாட்டை, மறுத்து மனைவியானவர் செய்யும் லியன் எனும் சத்தியம் மட்டுமே ஷரியா சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதைத் தவிர்த்து, வேறெந்த சத்தியம் பிரமாணமும் செய்யும் விதிமுறை இஸ்லாத்தில் இல்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாட்சிகள் இல்லாதபட்சத்தில், அவர் சும்மா இருப்பதே நல்லது.

புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹாடி, நஜிப் ரசாக் அண்மையில் அல்தான்துயா கொலையில் தாம் சம்பந்தப்படவில்லை என டிசம்பர் 20ஆம் தேதி கோலாலம்பூர், கம்போங் பாரு பள்ளிவாசலில் சத்தியம் செய்தது பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். காரணம் இல்லாமல் சத்தியம் செய்தால் இறைவன் அதனை விரும்பமாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்

11 ஆண்டுகளுக்கு முன்னர், நஜிப் புக்கிட் மெர்தாஜம் பள்ளிவாசலில் அல்தான்துயா சம்பந்தமாக முதன்முறையாகச் சத்தியம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − seven =