தோல்வியினால் ஏற்பட்ட கூட்டணி இது!

Transport minister Anthony Loke

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ ஆட்சியை இழக்காதிருந்தால், பாஸ் கட்சியுடன் அம்னோ கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என நெகிரி செம்பிலான் ஜசெக தலைவர் அந்தோணி லோக் கூறினார்.
முன்பு அம்னோ ஆட்சியில் இருந்தபோது பாஸ் கட்சியை ஓரம் கட்டுவதில் தான் குறியாக இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இப்போது அதிகாரத்தை இழந்துவிட்டதால் பாஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதில் அம்னோ தீவிரம் காட்டி வருவதாக போக்குவரத்து அமைச்சருமான அவர் சொன்னார்.அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு அரசியல் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
அம்னோ தொடர்ந்து அரசியலில் நிலைத்திருக்கவும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கவும் பாஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதைவிட அம்னோவுக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் அவர்.
நேற்று முன்தினம் புத்ரா உலக வாணிப மையத்தில் அரசியல் கூட்டணி சேருவதற்கான ஒப்பந்தத்தில் இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
பாஸ் கட்சியை தனது எதிரியாக இது வரை கருதி வந்த அம்னோ அந்த இஸ்லாமிய கட்சியுடன் இன்று கூட்டுச் சேர்வதற்கு அரசியலை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − three =