தொழில் நுட்பத்திற்கு வாருங்கள்; உங்களை கரம் பிடித்து எதிர்காலத்திற்கு கூட்டிச் செல்லும்

0
பேராவில் வேலையின்றி இருந்த மலேசியர்களின் எண்ணிக்கை கடந்த 2015 இல் 32,500 பேர் 3.5 விழுக்காடாக இருந்த நிலையில், 2016இல் 34,400 பேர் 3.4 விழுக்காடு, 2017 இல் 37,800 பேர் 3.7 விழுக்காடாக பதிவு செய்த நிலையில், 2018 இல் 35,000 பேர் 3.3 விழுக்காடு எனும் குறித்த எண்ணிக்கைக்கு குறைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு தவிர்த்து 2015,2016,2017 ஆம் ஆண்டுகளில் மாநிலம் பாரிசான் வசம் இருந்தது என்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், புக்கிட் கந்தான் சட்டமன்ற உறுப்பினர் மஸ்லின் ஷா நேற்று சட்டமன்ற அவையில், மாநிலத்தில் எத்தனை விழுக்காடு வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்றும், பேரா அரசு  அதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனும் குறித்த கேள்விக்கு சிவநேசன் இந்த புள்ளி விபரத்தை முன்வைத்தார்.
இந்த பிரச்சினையை மாநில அரசு வெறுமனே வேடிக்கை பார்க்காமல், துரித நடவடிக்கையாக ஆங்காங்கே உள்ள மாவட்டங்கள் தோறும், நிறுவனங்கள், வேலை தேடும் மலேசியர்கள் மற்றும் மனித வள இலாகாவும் இணைந்து விளக்கமளிக்கும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம் என்றார் அவர். 
இதன் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களின் திறமைக்கு ஏற்றபடி தனியார்துறையினரின் நேர்முகத்தேர்வு மூலமாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

அதனால், பல்வேறுபட்ட நிறுவனங்களின் மனித வளம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகிறது. இதையும் கடந்து பலர் இணையத்திற்கு சென்று தாங்களாகவே முன்வந்து சொந்த முயற்சியில், வேலையைத் தேடிக்கொள்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த ஆண்டு பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஒரு புதிய அணுகுமுறையை கொண்டுவந்துள்ளது. 12 மாதத்திற்குள் அந்த பட்டதாரி வேலையின்றி இருக்க நேரிட்டால், அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் 2 ஆண்டுகள் வரையில், மாதம் 500 வெள்ளி மானியம் கொடுக்கப்படும் திட்டம் பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவர்கள் வேலையில் அமர்ந்த 24 மாதங்கள் வரையில், வேலை பார்க்கும் அவர்களுக்கான மானியம் 300 வெள்ளியாக அந்நிறுவனத்திடம் சேர்க்கப்படுகிறது. தற்போது குறைந்த பட்ச சம்பளம் 1,100 வெள்ளியிலிருந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாதம் 1,200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் கற்றவர்களுக்கு மாதம் 2,200 வெள்ளி வருமானம் பெறுகின்ற வாய்ப்பினை தனியார்துறை நிறுவனங்கள் வழங்கவுள்ளது.
அவர்களுக்கு ஏன் இந்த தொகை வழங்க நிறுவனம் முன்வருகிறது என்றால், தொழில் நுட்ப மயமாக்குதல் எனும் போட்டித் தன்மையில் நாடு எதிர்நோக்கி வருவதால், அந்த மாற்றம் தேவையாக உள்ளது. எஸ்பிஎம் தேர்வில் சிறந்த அடைவு நிலை கிட்டாத மாணவர்கள் தொழில்நுட்பம் கற்றவர்களை கைபிடித்து வளமான எதிர்காலத்திற்கு கூட்டிச் செல்கிறது என்றும் சிவநேசன் நீண்டதோர் விளக்கம் அளித்தார்.

கோரம் இல்லாததால் மக்களவை ஒத்தி வைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − nineteen =