தொழிலை மின்னுலகமயமாக்கி வெற்றி நடை போட இந்தியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

கடந்த மூன்று மாதங்களாக கோவிட்-19 பாதிப்பினால் உலக வர்த்தகம் தேக்கநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக சுற்றுலாத்துறையும், அதனைச் சார்ந்துள்ள பல்வேறுபட்ட துறைகளும், விமானத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் வேலையில்லாமல் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதே சமயம் சுயமாக தொழில் செய்பவர்கள் வெளி நடமாட்ட கட்டுப்பாட்டால், தொழில் புரிவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிட்டிருக்கலாம்.
இந்தக் காலக்கட்டத்தில் எதிர்நீச்சல் அடித்து வெற்றிபெற வேண்டும் என்று உறுதியான உள்ளம் கொண்டு, தொழிலை மின்னுலகமாக்கி சாதிப்பதற்கு இந்திய தலைமுறைக்கு அரிய வாய்ப்பு இது.
இன்றைய சூழலில், வீட்டில் இருந்துக்கொண்டே வேலைப் பார்த்து பணம் சம்பாதிக்கவும் முடியும். அதற்கு வேண்டிய வாய்ப்புகள் நம்மைத்தேடி வருகின்றபோது அதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள நாம்தான் தயாராக இருக்க வேண்டும்.
தனியார்துறையை தவிர்த்து இன்று அரசாங்கமும் நிதியுதவி செய்வதற்கு தயாராக உள்ளது.
தகுதியுள்ளவர்களுக்கு ரி.ம.5000 வரை திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத மானியம் வழங்கப்படும். இத்தகைய நிதியுதவி குறிப்பாக வலைத்தளம் உருவாக்கம் மற்றும் மேம்பாடு சார்ந்த துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக முன்னேறுவதற்கும், இன்னும் புதுயுக வர்த்தகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருக்கும் வணிகர்களும் இந்த நிதியுதவி பெரும் உத்வேகமாக இருக்கும். தொழில் செய்துக்கொண்டு இருக்கும் வர்த்தகர்கள், தங்களுடைய தொழிலை மின்னுலக மயமாக்கிக்கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
“அரசாங்கத்தின் நிதியுதவியை பெற்று வாழ்வை வளமாக்கி கொள்ள வாருங்கள்.
அனைத்து இளைஞர்களும் தங்களின் திறமையைக் காட்ட இது ஓர் அரிய வாய்ப்பு” என்று இத்துறையில் அதிக முன் அனுபவமுள்ள கிருஷ்ணன் கூறினார்.
மேலும், கிருஷ்ணன் தலைநகர் ஜாலான் துன் சம்பந்தன் 3, பிரிக்பீல்ட்ஸ் எனும் முகவரியில் உள்ள அர்த்த ஞான மையத்தில் வரும் திங்கள்கிழமை 21-09-2020 இரவு 7.30 மணி தொடங்கி 9.30 மணி வரை இலவச விளக்க உரையாற்ற உள்ளார்.
மேலும் இவர் பங்கேற்பாளர்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிப்பதிலும் வல்லவர். இந்த நிகழ்வில் இளம் தொழில்முனைவர்கள், சிறு நடுத்தர வர்த்தகர்கள், சில்லறை வணிகர்கள், உணவுத் தொழில், ஏர்கொண்டிஷன் பழுது சேவைகள், பூக்கடை நடத்துனர்கள், அச்சகத்தினர், மருத்துவ சாதன விற்பனையாளர்கள் எனப் பல வகையான தொழில்முனைவர்கள் மற்றும் சேவை வழங்குபவர்கள் பங்கேற்று பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்நிகழ்ச்சி குறித்த மேல்விபரங்களுக்கு 0123025643, 0122717776, என்ற எண்களுக்கு அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 3 =