தொழிலாளர்களின் பதிவுக்கான இறுதி நாள் பிப்ரவரி 29; சொக்சோ

மார்ச் 1 முதல் தங்கள் தொழிலாளர்களை பதிவு செய்யத் தவறும் முதலாளிகள் மீது சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) நடவடிக்கை எடுக்கும். சிலாங்கூர் சொக்சோ இயக்குனர் முஸ்தபா டிராமன் கூறுகையில், பிப்ரவரி 29 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
சமூக பாதுகாப்பு சட்டம் 1969 (சட்டம் 4) மற்றும் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைமை சட்டம் 2017 (சட்டம் 800) ஆகியவற்றின் கீழ், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அனைத்து முதலாளிகளும் அவர்களை சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) பதிவு செய்ய வேண்டும் என்று முஸ்தபா கூறினார்.
சட்டத்திற்கு இணங்கத் தவறும் முதலாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) மார்ச் முதல் நாடு முழுவதும் “ஓப்ஸ் கேசன் பெர்கெசோ” (டீயீள முநளயn ஞநசமநளடி) ஒன்றை அறிமுகப்படுத்துவார் என்று அவர் கூறினார். “குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், முதலாளிகள் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிப்பார்கள் அல்லது ரி. ம. 10,000 வரை அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். பதிவு செய்ய விரும்பும் முதலாளிகள் 03-4257 5755 என்ற எண்களுக்கு அழைக்கலாம் அல்லது றறற.யீநசமநளடி.படிஎ.அல என்ற அகப்பக்கத்தை பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =