தொழிற்சாலைகளை மூட ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உண்டு

வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை மீறும் தொழிற்சாலைகளை மூட ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் இருப்பதாக வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சர் ஸுரைடா கமாருடின் தெரிவித்தார். தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தை ஊராட்சி மன்றங்கள் கண்காணிக்க அதிகாரம் இருப்பதால், அதனை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஜூன் 29ஆம் தேதி மத்திய அரசு அந்த அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அளித்த பின்னர், அது ஊராட்சி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், விதிமுறையக் மீறும் தனிநபர்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியோரின் மீது அச்சட்டப் பிரிவு 342இன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அவர் மேலும் கூறும்போது, ஊராட்சி மன்றங்கள் சட்டத்தை மீறுவோரை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை, தொழிற் சாலைகளை மூட ஊராட்சி மன்றங்கள் உத்தரவிட முடியாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஸெ ஹான் குறிப்பிட்டிருந்ததோடு அந்த அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். ஸுரைடா மேலும் கூறும்போது, அரசு வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சின் கீழுள்ள பூர்வீகக்குடிகள், பெல்டா குடியேற்றவாசுஜக், பாரம்பரிய கிராமப்புறங்களில் உள்ளவர்கள், அங்காடிக் கடைக்காரர்கள் ஆகியோருக்கும் 225,000 டோஸ் தடுப்பூசி மருந்தை வழங்கும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =