தொற்றினால் மரணமடைந்தவர்களின் உடலை சவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்


கோவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மரணம் அடைகின்றனர். அவர்களின் உடல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படாமல் நேரடியாக உடல் எரிக்கப்படுகிறது. அந்த நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதை பொருட்டு மருத்துவ துறையில் இருக்கும் சில செயல்பாடுகள் தவிர்க்கப்படுகிறது. ஆனால், மக்களுக்கு தெளிவு ஏற்பட கோவிட் – 19ஆல் இறந்தவர்களின் சடலம் சவப்பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்படுவது நல்லதே என இன்சான் பெக்கா அமைப்பு தலைவரும் மருத்துவருமான டாக்டர் பாலசந்திரன் கோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.
என்னுடைய கருத்துக்கு பலர் மறுப்பு கூறலாம். அதிலுள்ள சில சாத்தியங்கள், உண்மைகளை உரைக்கிறேன்.
அண்மையில் கோவிட் 19 னால் ஒரு 26 வயது தாதியர் மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் வெளியானது. தாதியர் என்பதால் அவர் தடுப்பூசி போட்டிருப்பார். தடுப்பூசி போட்டிருந்தும் ஏன் தாதியர் கோவிட் 19- னால் மரணம் அடைந்தார் என்று மக்கள் கேட்கின்றனர். இது போன்ற சம்பவங்களில் மக்களுக்கு தெளிவு உண்டாக, கோவிட் 19-னால் மரணம் அடைந்தவர்களின் உடலில் சவப்பரிசோதனை செய்வது நல்லது. அந்த தாதியர் கோவிட்டினால் இறந்துள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால், கோவிட் தொற்றில் பாதிக்கப்பட்டவர் இறந்தால், அவருடைய உடலில் எந்த உறுப்பு பாதித்துள்ளது. உடலில் என்ன நடந்தது என தெளிவான வகையில் விளக்கம் இருந்தால், மக்களுக்கு தடுப்பூசி மீது மேலும் நம்பிக்கை உண்டாகும். அதாவது, தடுப்பூசி போட்ட ஒருவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால், இப்பொழுது அனைவரும் தடுப்பூசியை தான் குறை கூறுகின்றனர். அந்த கருத்தை முறியடிக்க, இறந்தவர் மீது தடயவியல் பரிசோதனை செய்தால் உண்மையிலேயே என்ன நடந்தது என தெரிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூரில் இப்பொழுது கோவிட்டினால் இறந்தவர் மீது சவப்பரிசோதனை செய்ய தொடங்கியுள்ளனர்.
நம் நாட்டிலும் கோவிட் 19 னால் மரணம் அடைந்தவரின் உடலில் சவப்பரிசோதனை செய்தால், மேலும் பல வகையில் மக்கள் பாதுகாப்பாகவும், தடுப்பூசியின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − seven =