தொடர் சோதனையில் வெ.2 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

0

அண்மையில் நடைபெற்ற தொடர் சோதனையில் பேரா போலீசார் 2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள் களை கைப்பற்றியுள்ளனர் என்று பேரா போலீஸ் தலைவர் ஆணையர் டத்தோ ரஸாருடின் ஹூசேன் கூறினார். கடந்த 27 ஜூலையன்று இந்த சோதனை ஈப்போவிலும் கம்பாரிலும் நடைபெற்றது என்ற ரஸாருடின் இங்குள்ள தங்கு விடுதியிலுள்ள ஒரு கார் நிறுத்து மிடத்தில் நடைபெற்ற முதலாவது சோதனை நடவடிக்கையின் போது மாநில போதைப் பொருள் மற்றும் கிரிமினல் விசாரணை இலாகா 3 ஆடவர்களையும் 2 பெண்களையும் 3, 8 வயதிலான 2 சிறார்களையும் கைது செய்தனர். இந்த சந்தேக நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கம்பாரிலுள்ள ஒரு தங்கு விடுதியில் இருந்த 2 ஆடவர் களும் ஒரு பெண்ணும் பகல் 1 மணியளவில் கைது செய் யப்பட்டனர். கைதானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் சிறார்கள் அவர்களின் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள னர்.
அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு சந்தேக நபர்கள் சிறுவர்களை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 13 =