தொகுதிக்கான எனது சேவை தொடரும்

22 மாத ஆட்சிக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கவிழ்க்கப்பட்டது துரதிர்ஷ்டமே என நூருல் இஸ்ஸா அன்வார் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தற்போது தாம் சார்ந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தம்மை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த தொகுதிக்குத் தமது சேவையைச் செய்து வருவதாக அவர் தெரிவித்தார். 2018 டிசம்பரில் அரசியலில் முக்கிய பங்காற்றுவதிலிருந்து தாம் விலகி, தமது தொகுதியான பெர்மாத்தாங் பாவில் சமூக சேவையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜாக்கிம் ஆதரவோடு போதைப் பித்தர்களின் மறு வாழ்வுக்குத் தகுந்த நடவடிக்கையை எடுத்து வருவதோடு பேராசிரியர் ஃபாத்திமா காரியோடு இணைந்து தொகுதியில் நிலவும் வறுமையைப் போக்கும் செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் நூருல் இஸா தெரிவித்தார். சிறை இலாகாவின் ஆதரவோடு சாதாரண குற்றவாளி களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி, சமூகத்தில் மீண்டும் அவர்களை இணைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவசாயத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைப் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தும் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.வறுமை நிலையில் இருக்கும் பெண்களின் கருப்பை புற்றுநோய் சிகிச்சையை மலாயா பல்கலைக்கழகத்தின் ரோஸ் அறக்கட்டளையின் ஆதரவில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேற்கண்ட திட்டங்களைச் செயல்படுத்த அதிகமான நிதி தேவைப்படுவதாகவும் புதிய அரசு அதற்கு உதவி செய்ய வேண்டுமென தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =