தைப்பூச ரத ஊர்வலம் குறித்து ஹலிமா மக்களவையில் விளக்கம் தர வேண்டும்

தைப் பூச ரத ஊர்வலம் தொடர்பில் 24 மணி நேரத்திற்கு ம் குறைவான கால கட்டத்தில் இரு மாறுபட்ட கூற்றுகளை வெளியிட்டு பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி யிருக்கும் ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹலிமா சாடிக் அதன் தொடர்பில் நாடாளுமன்ற த்தில் விளக்க மளிக்க வேண்டும் என பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கேட்டு க் கொண்டார். அமைச்சர் இன்று ஒன்றை பேசி விட்டு நாளை ஒன்றை பேசுவது அரசாங்கம் மீதான மக்களின் நம்பகத்தன்மை யை இதன் மூலம் இழக்க நேரிடலாம். இதனைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற க் கூட்டத்தில் ஹலிமா தனது கூற்றை சரி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதனிடையே ரத ஊர்வலம் தொடர்பில் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் ஆர்.எஸ்.என்.ராயர் முன் வைத்த தீர்மானம் நிராகரிக்கப் பட்டிருப்பதாக மக்களவை துணைத் தலைவர் ரஷிட் ஹஸ்னோன் தெரிவித்தார். இந்த ஆண்டைப் போன்று வரும் தைப் பூச விழா காலத்தில் ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைத்துள்ளதோடு அதற்கான சரியான விளக்கத்தை ஹலிமா தர வேண்டும் என்று லிம் குவான் எங் நாடாளுமன்ற த்தில் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =